2025 மே 03, சனிக்கிழமை

‘ஆசிரியர்களை சொந்த மாவட்டங்களிலே கடமைக்கு மீள அனுப்பவும்’

Editorial   / 2019 பெப்ரவரி 19 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஹஸ்பர் ஏ ஹலீம், அப்துல்சலாம் யாசீம், கே.எல்.ரி.யுதாஜித்,  எப்.முபாரக், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

தமது சொந்த மாவட்டங்களை விட்டு வேறு மாவட்டங்களில் கடமை புரிகின்ற ஆசிரியர்களை, அவரவர் வாழும் மாவட்டங்களுக்குக் கடமை புரியும் வகையில் ஏற்ற ஒழுங்குகளைச் செய்யுமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுவிடயமான கலந்துரையாடல், மட்டக்களப்பு ஆளுநர் பணிமனையில் நேற்று (18) நடைபெற்றது.

இதில் மாகாண கல்வி பணிப்பாளர், வலயக் கல்வி பணிப்பாளர்கள், மேலதிக கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆளுநரின் புதிய உத்தரவின்படி, இடமாற்றத்துக்கான விண்ணப்பங்கள், நேற்று (19) முதல் கோரப்பட்டுள்ளதாக, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமது சொந்த மாவட்டத்தில் கடமை புரிவதற்கான விண்ணப்பத்தை பூரணப்படுத்தி, இம்மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர், மாகாண கல்வித் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கும்பட்சத்தில், அது பரிசீலிக்கப்பட்டு, ஏப்ரல் 05ஆம் திகதி தொடக்கம் இடமாற்றங்கள் வழங்கப்படும் எனவும் ஆளுநரின் உத்தரவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த இடமாற்றத்தின் காரணமாக, கிழக்கு மாகாணத்தில் ஏற்படும் சுமார் 800 ஆசிரிய வெற்றிடத்தை உடனடியாக நிரப்புவதற்காக, மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு விண்ணப்பங்களைக் கோரவுள்ளதாகவும் இக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X