2025 மே 08, வியாழக்கிழமை

ஆட்டோக்களில் ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

சமூக மட்டத்தில் சிறுவர்கள் விபத்துக்குள்ளாவதை தவிர்க்கும் முகமாக வாகன சாரதிகளுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் ஸ்டிக்கர்களை முக்சக்கரவண்டிகளில் ஒட்டும் நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை மாலை காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் வழிகாட்டலுக்கு அமைவாக ஐரோப்பிய நிதி உதவியுடன்   சமூக மட்டத்தில் சிறுவர்களுக்கு ஏற்படுத்தும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மட்டக்களப்பு சர்வோதய நிறுவனமும் மற்றும் காத்தான்குடி போக்குவரத்து பொலிஸ் பிரிவும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.  

கத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்சக்கர வண்டிகளின் விபத்துக்களை தவிர்க்கும் முகமாகவும்  வீதி விதிமுறைகளை பின்பற்றி வாகனத்தை செலுத்துவது தொடர்பாகவும்  சாரதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது வீதிச் சமிக்ஞைகளை மதித்து நடக்கும் சாரதிகளை பாராட்டுகின்றோம், சாரதிகளே உங்களின் கவனமின்மை ஊரவரின் உயிரைக் குடிக்கும், வீதி ஒழுங்குகளை கடைப்பிடிப்போம்,  விபத்துகளை தவிர்ப்போம், சாரதிகளே அதிகவேகம் வாழ்வின் ஆனந்தங்களை இல்லாது செய்துவிடும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட ஸ்டிக்கர்கள் முக்சக்கரவண்டிகளில் ஒட்டப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X