Princiya Dixci / 2022 மே 15 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், எப்.முபாரக்
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஆண்கள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மட்டு.,,போரதீவுப்பற்று, நெல்லிக்காடு கிராமத்தில் விவசாயக் காணியில் இருந்து நான்கு பிள்ளைகளின் தந்தையான அழகிப்போடி தங்கராசா (வயது-65) என்பரவது சடலம், நேற்று (14) மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 12ஆம் திகதி மாலை வீட்டிலிருந்து வெளியில் போன குடும்பஸ்தர் வீட்டுக்கு வராத காரணத்தால் உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்ட நிலையில், அவருடைய விவசாய காணியில் விவசாயத்துக்கு பாவிக்கும் கிருமி நாசினி போத்தல் அருகாமையில் கிடந்தவாறு சடலமாக மீட்கப்பட்டார்.
அதேவேளை, திருகோணமலை துறைமுக பொலிஸ் பிவுக்குட்பட்ட லிங்க நகர் கடலில் ஆணொருவரின் சடலம், நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, இலிங்க நகர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சண்முகநாதன் கருணாகரன் (வயது-49) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் சென்ற நிலையில் சடலம் மிதப்பதை அவதானித்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்கள்.
பிரேதப் பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைக்குமாறு,திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் தர்ஷினி அண்ணதுரை சம்பவ இடத்துக்கு வந்து பொலிஸாருக்குப் பணித்தார்.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் வெல்லாவெளி மற்றும் திருகோணமலை துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
6 minute ago
16 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
6 minute ago
16 minute ago
25 minute ago