2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஆபத்தில் மாணவர்கள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் அல்முனீறா வித்தியாலயத்தில் புதிய கட்டட நிர்மாணிப்புக்காக பழைய மாடிக் கட்டடம் உடைக்கப்பட்டுள்ள போதும், அதன் இடிபாடுகள் சீராக அகற்றப்படாமல், இரும்புக் கம்பிகள் நீட்டிக் கொண்டிருப்பது மாணவர்களுக்கு ஆபத்தானது என்று  பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இடிபாடுகள் முழுவதுமாக அகற்றப்படாத இந்த நிலைமையிலேயே, மாணவர்கள் அந்த இடத்தில் நடமாடவேண்டியுள்ளது.

இந்த பாடசாலையில், நவீன வசதிகளைக் கொண்ட 3 மாடிக் கட்டடம் அமைப்பதற்கான முதற்கட்ட நிர்மாணக் கொடுப்பனவையும் சம்பந்தப்பட்ட கட்டட நிருமாண ஒப்பந்தக்காரர் பெற்றுள்ள போதும் ஏன் இன்னமும் நிர்மாண வேலைகள் தொடங்கவில்லை என்றும் கேள்வி எழுப்பப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X