2025 மே 09, வெள்ளிக்கிழமை

ஆயிரமாவது குருதி சுத்திகரிப்பு கொண்டாடப்பட்டது

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிறு நீரக நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் குருதி சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு, 1,000 தடவைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டமையைக் கொண்டாடும் வைபவம், வைத்தியசாலையில், இன்று (15) நடைபெற்றது.

வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் குருதி சுத்திகரிப்பு பிரிவின் வைத்திய அதிகாரி டொக்டர் எம்.அஸ்ஹர், வைத்தியர்கள், தாதியர்கள், குருதி சுத்திகரிப்புப் பிரிவில் கடமையாற்றும் தாதியர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது இனிப்பு பண்டங்களும் பரிமாறப்பட்டன. காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிறு நீரக நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் குருதி சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு, 11 மாதங்களில் 1,000 தடவைகள் குருதி சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தெரிவித்தார்.

இது ஒரு முன்னேற்ற கரமான நடவடிக்கை எனவும் இதற்கு வைத்தியர்கள் தாதியர்களின் ஒத்துழைப்புமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X