2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணி

Editorial   / 2021 மே 25 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, மட்டக்களப்பு, பன்குடாவெளி வயல் பிரதேசத்திலுள்ள தனியார் சவக்காலையொன்றில் நேற்று (24) அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

வவுணதீவு விசேட அதிரடிப்படையினர் மற்றும் கரடியனாறு பொலிஸாரும் இணைந்து இந்த அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.

மேற்படி இடத்தில் விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக               பொலிஸாருக்குக் கிடைத்த  இரகசியத் தகவலையடுத்து, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் அகழ்வை மேற்கொள்ள அனுமதி வழங்கியிருந்தது.

எனினும், சவக்காலையின் கல்லறைகளுக்கு அருகில் தோண்டப்பட்டபோதிலும் எவ்வித வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லையென படையினர் தெரிவித்தனர்.

சுமார் இரண்டு மணி நேரமாக சவக்காலையின்  பல இடங்கள் தோண்டப்பட்டன. எனினும், எவ்வித தடயங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X