2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு - செங்கலடி வேப்பயடி ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தின் ஒலிபெருக்கி பாவனைக்கு பொலிஸார் தடையாக இருப்பதாக கூறி பிள்ளையாரடி வட்டாரம் கணபதி நகர் கிராம மக்களால், புதன்கிழமை(24) மாலை ஆலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்மொன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த ஏறாவூர் பொலிஸார், தாம் இது குறித்து இனி அவதானமாக இருப்பதாகவும் எந்த ஒரு தனி நபரினதும் நலனுக்காக தாம் இந்த தடையை விதிக்கவில்லை என்றும் தமக்கு வந்த புகாரின் அடிப்படையிலேயே சில கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டி ஏற்பட்டதாகவும் கூறியதுடன், ஆலயத்தில் இனி ஒலி பெருக்கியை தடையின்றி பயன்படுத்துமாறும் அதற்கான அனுமதியை தாங்கள் வழங்குவதாகவும் வாக்குறுதி வழங்கியதன் பின்னர், மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X