Princiya Dixci / 2016 நவம்பர் 03 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சர்வோத நிறுவனத்தின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.ரி. ஆரியரத்னாவின் 85ஆவது பிறந்த தினத்தையொட்டி, நாட்டின் பல்வேறு பாகங்களிலும் எதிர்வரும் 05ஆம் திகதி, பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சர்வோதய நிறுவனத்தின் மாகாண இணைப்பாளர் ஈ.எல். அப்துல் கரீம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சர்வோதய மாவட்டப் பயிற்சிப் பாடசாலை சத்துருக்கொண்டானில் 85 பேர் இரத்ததானம் செய்யவுள்ளதுடன், 85 செவ்விளநீர் தென்னம்பிள்ளை நடுகையும், சிரமதானம் மற்றும் பல் சமய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் இங்கினியாகல பொல்வத்தையிலிருந்து செவ்விளநீர் தென்னம்பிள்ளை எடுத்துவரப்பட்டு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் சமயப் பிரார்த்தனைகளுடன் நாட்டப்படவுள்ளன.
இந்நிகழ்வுகளில் மூவின சமூகங்களைச் சேர்ந்த பல் சமய மக்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கலாநிதி ஆரியரத்தன 1958 ஆம் ஆண்டு சர்வோதய இயக்கத்தை நிறுவி சுமார் 60 வருடங்கள் அந்த இயக்கத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளதோடு, இலங்கை அரசியல் சாசன உறுப்பினர்களில் ஒருவராகவுமுள்ளார்.
தேசோதய, சாந்தி சேனா இளைஞர் அமைப்பு, சர்வோதய சிறுவர் அமைப்பு, சர்வோதய மகளிர் அமைப்பு, சர்வோதய பொருளாதார அபிவிருத்தி அமைப்பு, சர்வோதய அபிவிருத்தி நிதிக் கம்பனி போன்றவை சர்வோதய நிறுவனத்தின் ஏனைய கிளை அமைப்புக்களாகும்.
நாட்டின் அனைத்து 25 மாவட்டங்களிலும் சர்வோதய நிறுவனத்தின் மாவட்டப் பயிற்சி நிலையங்கள் உள்ளன.
சர்வோதய நிறுவனம் அதன் ஆரம்ப காலம் தொட்டு கல்வி, சுகாதார, சமூக, பொருளாதார, அரசியல் விழிப்புணர்வுகளிலும் வீடமைப்பு, வாழ்வாதாரம், தொழிற்பயிற்சி, சகவாழ்வு, சூழல் சுற்றாடல் இயற்கை வளப் பாதுகாப்பு, நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வந்திருக்கின்றது.
2 minute ago
45 minute ago
53 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
45 minute ago
53 minute ago
6 hours ago