Suganthini Ratnam / 2017 ஜனவரி 10 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுக்கான ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதுடன், இப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள காத்தான்குடி நூரானியா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுடான சந்திப்பின்போதே, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் குறிப்பிட்டார்.
காத்தான்குடி நூரானியா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கான தீர்வொன்றை பெற்றுக்கொள்ளும் முகமாக நூரானிய வித்தியாலயத்தின் அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பெற்றோர்கள் இணைந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கை சந்தித்தனர்.
ஆரம்ப பிரிவின் ஆசிரியர் பாற்றாக்குறை காரணமாக தமது பிள்ளைகளுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் உரிய முறையில் நடைபெறுவதில்லை எனவும் இதனால் தமது பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்றதொரு அச்சம் எங்களிடம் காணப்படுவதாகவும் ஆரம்பப் பிரிவு ஆசிரியர் பற்றாக்குறைக்கான தீர்வொன்றினை உடனடியாக பெற்றுத்தருமாறு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக்கிடம் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், இத்தகைய ஆரம்பப் பிரிவுக்கான ஆசிரியர் பற்றாக்குறைகள் பரவலாக கிழக்கு மாகாண பாடசாலைகளில் காணப்படுவதாகவும், இதற்கான உரிய தீர்வினை உடனடியாக பெற்றுக் கொடுக்குமாறும் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் மிக விரைவில் மேற்கொள்ளப்பட்டு மேலதிகமாக ஆசிரியர் ஆளணிகள் உள்ள பாடசாலைகளிலிருந்து பற்றாக்குறையாகவுள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை வழங்கும் நடவடிக்கைகள் இம்மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் இப்படசாலைக்கான ஆரம்பப் பிரிவு ஆசிரியர் ஒருவரை பெற்றுத்தருவதற்கு நான் உறுதியளிப்பதோடு, மேலும் இடைப்பட்ட காலத்தில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக தற்காலிகமாக பட்டதாரி ஆசிரியர் ஒருவரை நியமிப்பதற்கு அதிபருக்கு நான் பரிந்துரை செய்வதோடு அவ்வாறு தற்காலிகமாக ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்படும் பட்சத்தில் அவருக்கான சம்பளத்தினை எனது சொந்த நிதியிலிருந்து வழங்குவதற்கும் உறுதியளிக்கின்றேன்' என தெரிவித்தார்.
26 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
3 hours ago