Janu / 2024 ஒக்டோபர் 09 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - மாவடி ஓடை நெடிய பொத்தானை ஆற்றில் மூழ்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்கிழமை (08) மாலை இடம்பெற்றதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு - தாழங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய தம்பிராசா சிவஞானம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் அவர் காக்கை வலிப்பு நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் நெல் வயலில் வரம்பு கட்டும் வேலைக்காக நெடிய பொத்தானை பிரதேசத்திற்கு வந்திருந்த குறித்த நபர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆற்று வழியாகச் சென்றவர்கள் அவரை அடையாளம் கண்டு அவரது உறவினர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசிர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
பேரின்பராஜா சபேஷ்

34 minute ago
42 minute ago
6 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
42 minute ago
6 hours ago
21 Dec 2025