2025 மே 08, வியாழக்கிழமை

ஆலையடிவேம்பு பகுதிக்கு 25 மலசல கூடங்கள்

Niroshini   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார்  

தயாகமகே குறூப் ஒப் கம்பனியின் நிதியுதவியுடன் 25 மலசல கூடங்களை கட்டுவதற்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச அமைப்பாளர் தா.ஜெயாகர் தலைமையில் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச காரியாலயத்தில் இன்று (07) நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் சமிந்த கமகேயின் 100 மலசல கூடங்கள் அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாகவே இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது,தலா 50ஆயிரம் ரூபாய் செலவில் இம்மலசல கூடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் எதிர்காலத்தில் 300 மலசல கூடங்கள் அமைப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அத்திட்டம் செயற்படுத்தப்படும் எனவும் பிரதேச அமைப்பாளர் தா.ஜெயாகர்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X