2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இ.போ.ச பஸ்களிலும் மதுபானம் கடத்தல்

Editorial   / 2020 ஏப்ரல் 12 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

நாடெங்கிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் இவ் வேளையில், மட்டக்களப்பு மாவட்டத்தில்  சட்டவிரோதமான முறையில மதுபான போத்தல் கடத்தலில் ஈடுபட்டிருந்த இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் உட்பட நால்வர், நேற்று (11) மாலை கைது செய்யப்பட்டள்ளனரென, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வாழைச்சேனை இலங்கை போக்குவரத்து சாலைக்குச் சொந்தமான பஸ், கும்புறுமூலையிலுள்ள சோதனைச் சாவடியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மேற்படி நபர்கள் கைதுசெய்யப்பட்டள்ளனர்.
 
குறித்த பஸ், சாலை முகாமையாளாரின் அலுவலக விடய பாவனைக்காக பயன்படுத்தப்பட்டு வந்ததாகும்.

தங்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலைலொன்றையடுத்தே, இந்த சட்டவிரோத நடவடிக்கை முறியடிக்கப்பட்டதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.ஜ.தனஞ்சயபெரமுன தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் வாழைச்சேனை சாலை முகாமையாளார், சாரதி, நடத்துநர், வெளி நபரொருவர் என நால்வர்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பஸ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X