Gavitha / 2016 ஒக்டோபர் 23 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையிலுள்ள சத்துருக்கொண்டான் எனுமிடத்தில் சனிக்கிழமை (22) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில், இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு காளிகோயில் வீதியைச் சேர்ந்த வி. ரதிதன் (வயது 17) மற்றும் கே. விதுஷன் ஆகியோரே இதன் போது பலியாகியுள்ளனர்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியைக் கண்டுகளிப்பதற்காக, ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியருகில் இருந்த பனை மரத்தில் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
படுயமடைந்த இருவரும், அவ்வழியே சென்றவர்களால் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


10 minute ago
10 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
10 minute ago
16 minute ago
1 hours ago