Suganthini Ratnam / 2016 மே 10 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்களை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் பாடசாலைகளில் இணைக்கும் நடவடிக்கை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று செவ்வாய்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக ஏறாவூர், முஹாஜிரீன் கிராமம், றூபி முஹைதீன் கிராமம், ஸக்காத் கிராமம், சிட்னி கிராமம் ஆகிய கிராமங்களிலேயே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் நகர் பிரதேச செயலக அதிகாரிகளும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அதிகாரிகளும்; இணைந்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட மாணவர்கள் 16 பேர் அல் அமான் வித்தியாலயத்திலும் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்திலும் மீளவும் இணைக்கப்பட்டனர்.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் சுமார் 180 மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியமை தெரியவந்துள்ளதாக அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் சேகு அலி தெரிவித்தார்.
குடும்ப வறுமை, பெற்றோரின்; கவலையீனம் உள்ளிட்;ட இதர காரணங்களினால் இந்த மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளமை தெரியவந்துள்ளது.
எனவே இந்த மாணவர்களுக்கு பாடசாலைச் சீருடை, கற்றல் உபகரணங்கள், போஷாக்கு உணவு ஆகியவற்றை இலவசமாக வழங்கி அவர்களின் கற்றல் நடவடிக்கையை ஊக்குவிப்பதற்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலய முறைசாராக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஷரீப், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.எப்.றமீஸா, கிராம அலுவலர், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இந்த நடவடிக்கையில் இணைந்திருந்தனர்.


52 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago