2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

இடமாற்ற விவகாரம்; ’த.தே.கூ எதுவும் கூறவில்லை’

Suganthini Ratnam   / 2017 ஜூலை 10 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள் எவரையும் இடமாற்றுமாறோ அல்லது மாற்ற வேண்டாம் என்றோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறவில்லை என, கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்  கூட்டம், பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் இடமாற்றத்தில் இப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராகிய நான் முக்கிய பங்கு வகிப்பதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே, இது தொடர்பாக மக்களைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது' என்றார்.

'எனது கருத்தை மாத்திரம் கேட்டு, பிரதேச செயலாளர்களை இடமாற்றினால், மாவட்டத்தில் அதிக செல்வாக்கு உள்ள நபராக என்னை கருதுகின்றார்கள். இது தவறானது.  
பிரதேச செயலாளர்கள் இடமாற்றம் தொடர்பாக த.தே.கூ   எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாறு கூறவில்லை' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .