2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இடமாற்றமும் பிரியாவிடையும்…

Editorial   / 2018 பெப்ரவரி 28 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, காத்தான்குடி தபால் நிலையத்தில் பிரதேச தபால் அதிபராகக் கடமையாற்றி, சம்மாந்துறை பிரதேச தபால் நிலைய அதிபராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் தபால் அதிபர் கே.எம்.மஸாஹிர் காரியப்பருக்கான பிரியாவிடை நிகழ்வு, காத்தான்குடி தபால் நிலையத்தில் நேற்று முன்தினம் (26) பிற்பகல் நடைபெற்றது.

காத்தான்குடி தபால் நிலையத்தின் அஞ்சல் சேவகர் கே.கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி பிரியாவிடை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயத்தின் பிரதம இலிகிதர் ஏ.சுகுமார், மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியாலய உத்தியோகத்தர் எஸ்.துஷ்யந்தன், காத்தான்குடி தபால் நிலைய உதவித் தபால் அதிபர்களான எம்.பீ.எம்.அன்சார், திருமதி பைறூசியா உட்பட காத்தான்குடி தபால் நிலையத்தின் உப தபாலக அதிபர்கள், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் ,அஞ்சற்காரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இவரது வெற்றிடத்துக்கு, மட்டக்களப்பு பிரதம தபாலகத்தில் கடமையாற்றும் தபால் அதிபர் ஏ.சகாயநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இரு தபால் அதிபர்களும், எதிர்வரும் 2ஆம் திகதி, தமது கடமைகளை தத்தமது தபால் நிலையத்தில் பொறுப்பேற்கவுள்ளனர்.

(படப்பிடிப்பு: பழுலுல்லாஹ் பர்ஹான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X