Princiya Dixci / 2022 ஜூலை 27 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்
வாழைச்சேனையில் நேற்று முன்தினம் (25) பிற்பகல் வேளையில் ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கம் காரணமாக பிரதேசத்தின் பல வீடுகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், வீடுகளிலிருந்த மின்சாரப் பொருட்களும் சேதமாகியுள்ளன.
வாழைச்சேனை, விநாயகபுரத்தில் இரு வீடுகளில் தென்னை மரங்களில் இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டதால் தீப் பற்றியுள்ளது. வீட்டின் கூரையின் மீது தீ பரவியதையடுத்து அயலவர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.
குறித்த வீடுகளில் வசித்தோர், உறவினர்களின் வீடுகளுக்கு சென்றிருந்ததால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படமால் தடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அப்பிரதேசத்தின் பல வீடுகளில் பாவனையில் இருந்த மின் பாவனைப் பொருட்கள் பல சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago