2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

இணைப்பாளர்கள் நியமிப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜனவரி 23 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, மட்டக்களப்பு மாவட்டத்துக்கென இரண்டு இணைப்பாளர்களை நியமித்துள்ளதாக, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அஹமட் மனாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட விதிகளை மீறி நடத்தல் தொடர்பாக இந்த இணைப்பாளர்களிடம் முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும்.

கெமிட் நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் கே.காண்டீபன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கபே அமைப்பின் இணைப்பாளராகவும் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் ஏ.எல்.மீராசாகிப், மட்டக்களப்பு மாவட்டத்துக்கான கபே அமைப்பின் உதவி இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட விதிகளை மீறி நடத்தல் போன்ற தேர்தலுடன் தொடர்புட்ட வன்முறைச் சம்பவங்களை, இணைப்பாளர் காண்டீபனின் தொலை பேசி இலக்கம் 0773624703 மற்றும் உதவி இணைப்பாளர் ஏ.எல்.மீராசாகிபின் அலைபேசி இலக்கம் 0772381455 எனும் இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தெரிவிக்க முடியுமென, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .