2025 ஜூலை 30, புதன்கிழமை

’இந்த ஆண்டு நிதியொதுக்கீடு கிடைக்கவில்லை’

Suganthini Ratnam   / 2017 ஜூலை 16 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில், மத்திய அரசாங்கத்திலிருந்து ஒரு சதமேனும் கிழக்கு மாகாணசபைக்கு இதுவரையில் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், இம்மாகாணத்துக்கு நிதி ஒதுக்கீட்டை  வழங்குவதில் மத்திய அரசாங்கத்தின் பாராபட்சத்தால்; அபிவிருத்திகளை முன்னெடுப்பதில் பல்வேறு தடங்கல்கள் ஏற்படுகின்றன எனவும் இன்று கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'இந்த ஆண்டில், அரையாண்டு கடந்துள்ள போதும்,  கிழக்கு மாகாணசபைக்கு இன்னும் நிதி கிடைக்கவில்லை.  

'மத்திய அரசாங்கத்தால் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி, தாமதமாகிக்; கிடைப்பதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். எனவே, இம்மாகாணசபைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை  உரிய வேளையில் வழங்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

'இதேவேளை கடந்த ஆண்டு  நிதி ஒதுக்கீட்டின்போது, மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளின் பற்றுச்சீட்டுக்களுக்கான நிதி  சமீபத்திலேயே மத்திய அரசாங்கத்தால்; விடுக்கப்பட்டது' என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .