2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

இந்துக் கலைக்கூடமும் அருங்காட்சியகமும் திறப்பு

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீட இந்து நாகரீகத்துறையில் இந்துக்கலைகூடமும், அருங்காட்சியகமும் திறப்பு விழா, எதிர்வரும் புதன்கிழமை (10) இடம்பெறவுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் தலைமையிலும், இந்து நாகரீகத்துறைத் தலைவர் கலாநிதி வ.குணபாலசிங்கம் துணைத் தலைமையில், யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன், கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் மா.செல்வராசா, பேராசிரியர் சி.மௌனகுரு முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் திபின்.பீ.ஆர், விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் க.கருணாகரன், சிறப்பு அதிதியாக கலை, கலாசார பீட பீடாதிபதி பேராசிரியர் ஜீ.கென்னடி உள்ளிட்ட அதிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X