Princiya Dixci / 2017 ஜனவரி 04 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தமிழ் அதிகாரிகள் முஸ்லிம் பிரதேசங்களிலும் முஸ்லிம் அதிகாரிகள் தமிழ்ப் பிரதேசங்களிலும் கடமையாற்றும் போது இன ஐக்கியமும் இன நல்லிணக்கமும் ஏற்படும். அதேபோன்று ஒரு சமூகத்தின் மத கலை கலாசாரம் என்பவற்றை அறிந்துகொள்ள முடியுமென, வவுணதீவு பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் முருகுப்பிள்ளை கோமலேஸ்வரன் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய இவர், இடமாறிச் சென்றமையை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரியா விடை வைபவத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,
'தமிழ் அதிகாரிகள் - தமிழ் பிரதேசங்களிலும் முஸ்லிம் அதிகாரிகள் - முஸ்லிம் கிரதேசங்களிலும் கடமையாற்ற வேண்டும் என்ற எண்ணம் மாற வேண்டும்.
'நான் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 9 வருடங்கள் கடமையாற்றியுள்ளேன். ஆனால், ஒரு நாள் கூட முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கும் எனக்கு எந்த முறன்பாடுகளும் பிரச்சினைகளும் வந்தது கிடையாது.
'முஸ்லிம்களுடைய சமயம், கலாசாரம் நடவடிக்கை என்பவற்றை அறிந்துகொள்ளவும் இன நல்லுறவை பேணவும் எனது கடமைக்காலம் பெரிதும் உதவியாக அமைந்தது.
'அரசாங்க அதிகாரிகள் என்ற வகையில் நாம் எந்தப் பிரதேசத்துக்கும் சென்று கடமையாற்றத் தயாராக இருக்க வேண்டும். ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்ப, அரசாங்க அதிகாரிகள் என்ற வகையில் நாம் பாடுபட வேண்டும்' என்றார்.
25 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
3 hours ago