ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இனப்பிரச்சினைத் தீர்வு என்ற விடயம் போய் இப்பொழுது தீர்த்துக் கட்டுதல் எனும் நகர்வு நடந்து கொண்டிருக்கின்றது” என, முன்னாள் உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சரான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
ஏறாவூரில், நேற்று (30) இடம்பெற்ற 'நாளைய தலைமுறை' எனும் விவரத் திரட்டு நூல் வெளியீடு, துறைசார்ந்த ஆர்வலர்கள் கௌரவிப்பு ஆகிய நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், “இன்றும் நாடு மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்நாட்டு உற்பத்தி எதுவுமின்றி, திருப்தியடையக் கூடியளவு ஏற்றுமதிகள் இன்றி, நாணயங்களின் மதிப்பு சரிந்துவிட்ட நிலையில் இருக்கின்றது. இதனடிப்படையில் பார்த்தால், இனப்பிரச்சினைக்குத் தீர்வும் கிடைக்கமாட்டாது. இனப்பிரச்சினைத் தீர்வு என்பதை இப்பொழுது எதிராக இருப்பவர்களைத் தீர்த்துக் கட்டுவதாக நினைத்திருக்கிறார்கள்.
“இலங்கை இராணுவத்தினருக்கு, சர்வதேச நாடுகள் பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமென்று, ஐ.நாவிலே கோரிக்கை முன்வைக்கும் ஜனாதிபதி, தனது கையில் பொதுமன்னிப்பை வைத்துக் கொண்டு, தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது என்பதுதான் இங்கு எழுகின்ற இருநிலை முரண்பாடுகளாகும்.
“தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பை வழங்கி விட்டு, உலக நாடுகளிடம் போய் இராணுவத்திற்குப் பொதுமன்னிப்பு வழங்குங்கள் என்று கேட்பதில் நியாயமிருக்கிறது.
“வட, கிழக்கு, மலையகத் தமிழ், முஸ்லிம் மக்கள், 100 சதவீதம் இணைந்து முடிவெடுப்பார்களாக இருந்தால், இந்த நாட்டினுடைய தலைவிதியை மாற்றி, சமத்துவமான உரிமைகளோடு, சிறுபான்மையினங்களும் வாழ முடியுமென்றார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago