Gavitha / 2016 ஜூன் 25 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
'இனவாதிகளின் செயற்பாடுகளை அரசு உடன் முடக்க வேண்டும்' என்று முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை (24) விடுக்கப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'நாடெங்கிலும் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள், பாடசாலைகள், மத்ரஸாக்கள் போன்றவற்று பவ்வேறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நாம் அறிவித்துள்ளோம். இதற்கு சுமூகமான முடிவை பெற்றுத்தருவதாக, அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறியுள்ளனர். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. இந்நிலைமைக்கு முடிவு கட்டாவிட்டால், நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடும்' என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பள்ளிவாசல்களை உடைக்கின்றார், முஸ்லிம் பெண்களுடைய ஹிஜாபுகளை களைவார் போன்றவற்றை அரசியல் ரீதியாக பயன்படுத்தி, எம்மிடமிருந்து வாக்குகளை பெற்றார்கள். ஆனால் கூறியதைப் போன்ற இந்த அரசாங்கம் எதுவும் செய்துவிடவில்லை. கிராம மட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களின் அச்சத்தை நீக்க வேண்டும் என்பதே, எம்முடைய வேண்டுகோளாக உள்ளது' என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
22 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
9 hours ago