2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

இன்றைய இளைஞர்கள் முட்டாள்களில்லை

Editorial   / 2019 ஜூலை 28 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்  

   தற்போதைய இளைஞர்,யுவதிகள் முட்டாள்கள் இல்லை.  இவர்கள்  நன்கு சிந்தித்துச் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளக்கூடியவர்களாவர்களாக திகழ்கின்றார்களென தெரிவித்த பொதுஜன பெரமுன கட்சியின் இளைஞர் அணித் தலைவரும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டிலும் அமுனுகம, தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக இளைஞர், யுவதிகள் தமது அறிவுகளைப் பெருக்கிக் கொள்கின்றார்கள் எனவும் கூறினார்.  

 பொதுஜன பெரமுன கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக்கான இளைஞர்அணி மாநாடு களுவாஞ்சிகுடி கஜா கலாசார மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது.   கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், செயற்பாட்டாளருமான பரமசிவம் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் இளைஞர் அணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்....

மகிந்த ராஜபக்சதான் யுத்தத்தை நிறைவு செய்தவர். ஆகவே, அவருக்கு  வாக்குகளை வழங்கவேண்டாமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் மக்களிடம்  கருத்துக்களை விதைத்தனர். அதனால் கடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்கவில்லையெனத்தெரிவித்த  டிலும் அமுனுகம,  எம்பி,வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்பதனால் இப்பகுதியில் அபிவிருத்திகள் செய்யாமலில்லை. ஆனால் மாறாக யுத்தத்தைக் கொண்டுவந்த கட்சிக்கு மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு இணங்க இரண்டாவது முறையாகவும் மக்கள் அக்கட்சிக்குத்தான், வாக்களித்துள்ளார்கள். எனவே, இப்பகுதி மக்கள் வாக்களித்தவர்களா இப்பகுதியில் அதிகளவு அபிவிருத்திகளைச் செய்துள்ளார்கள், வாக்களிக்காதவர்களா அபிவிருத்திகளைச் செய்துள்ளார்கள் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X