Princiya Dixci / 2017 மே 06 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லதம்பி நித்தியானந்தன்
மட்டக்களப்பு - செங்கலடி பதுளை வீதியிலுள்ள கொடுவாமடு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டமொன்று இன்று (6) சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
கல்குடா கும்புமூலை வேம்பு பகுதியில் அமைக்கப்படுகின்றதான மதுபானசாலை உற்பத்தி தொழில்சாலையை நிறுத்தக்கோரியும், கல்குடா பகுதியில் வைத்து தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நியாயமான நீதியான விசாரணைகோரியும், செங்கலடி பதுளை வீதியிலுள்ள கொடுவாமடு கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் கொடுவாமடு சக்தி விளையாட்டுக் கழகமும் இணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தன.
ஆர்ப்பாட்டத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டிருந்தார்.
அங்கு அவர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
“கல்குடா, கும்புறுமூலையில் கட்டப்படுகின்றதான எரிசாராய உற்பத்தி தொழில்சாலையை நிறுத்துமாறு மாகாணசபை, பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டங்களில் தீர்மானமெடுத்தும் தற்பொழுதும் உற்பத்தி தொழில்சாலை கட்டுமானப் பணி இடம்பெறுகின்றது.
“குறித்த எரிசாரய உற்பத்தி நிலையத்தினால் வேலைவாய்ப்பு என்ற ஒரு நன்மையை மாத்திரம் கொண்டு பலர் இலாபமீட்டுவதற்கு செயற்படுகின்றார்களே தவிர, எமது சமூகத்தின் எதிர்கால நலனை எவரும் முன்னெடுப்பதாக இல்லை.
“முன்னைய ஆட்சியாளர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்த மதுபான விற்பனை நிலையத்தினால் தற்பொழுது தமிழ் மக்களின் வாழ்வாதாரம் சீரழிந்த நிலையிலுள்ள இடத்தில் இருப்பதினால் இவ்வாறான எரிசாரய உற்பத்திச் தொழில்சாலை நிலையங்களை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago