Suganthini Ratnam / 2016 மே 09 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், யோ.சேயோன்
மட்டக்களப்பு, மண்முனை தென்னெருவில்பற்றுப் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் படுகாயமடைந்த ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்புக்கு இரண்டு பேருடன் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பம் ஒன்றுடன் மோதியது. இதன்போது, படுகாயமடைந்த இவர்கள் இருவரும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்தவர்களான டினுக்சன் (வயது 26), பத்மசிறி (வயது 26) ஆகியோரே இதில் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளை, களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி தேற்றாத்தீவு பிரதான வீதி ஊடாகச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் மீது பின்னால் சென்றுகொண்டிந்த, முச்சக்கரவண்டி மோதியதில் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலிதீன் அஸீசா (வயது 47), சுலைமான் லெவ்வை காலிதீன் (வயது 48), றிபான் வயது (வயது 28) ஆகியோரே படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் இவர்களில் றிபான் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

43 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago