2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

இருவேறு விபத்துகளில் ஒருவர் பலி; சாரதி கைது

Suganthini Ratnam   / 2016 மே 05 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில், ஏறாவூர் நான்காம்; குறிச்சி பஸார் பகுதியில் புதன்கிழமை (04) இரவு இடம்பெற்ற விபத்தில், மாட்டிறைச்சிக் கடைத் தொழிலாளியான ஐயங்கேணியைச் சேர்ந்த சீனிமுஹம்மது ஜமால் (வயது 48) என்பவரே பலியாகியுள்ளார்.

திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த காத்தான்குடி டிப்போவுக்குச் சொந்தமான பஸ், ஏறாவூர் பிரதான வீதியால் சைக்கிளில் பயணித்தவர் மீது மோதியது.

இந்த விபத்தைத் தொடர்ந்து, ஏறாவூரைச் சேர்ந்த பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டதுடன், குறித்த பஸ்ஸும் பொலிஸ் நிலையத்தில்  வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சைக்கிளில் தடுமாறிச் சென்று கொண்டிருந்தவரை விபத்திலிருந்து தடுப்பதற்காக தான் முடிந்தவரை முயற்சித்து பஸ்ஸை விலக்கி தெருவின் அடுத்த பக்கம் வரை கொண்டு சென்றபோதும், விபத்து இடம்பெற்று விட்டதாக பஸ் சாரதி பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறிருக்க, காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதான வீதியில் மஞ்சள் கோட்டுக் கடவையைக் கடக்க முற்பட்ட பெண் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த அப்பெண் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி ஆறாம் குறிச்சியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் கூறினர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X