Kogilavani / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.பாக்கியநாதன்
இறை இரக்க ஆண்டு 2015 ஒக்டோபர் முதல் 2016 ஒக்டோபர் வரை அனுஷ்டிக்கபடுவதை முன்னிட்டும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்தத் தட்டுப்பாட்டை நீக்கும் நோக்கோடும், இரத்ததான நிகழ்வு, நேற்று சனிக்கிழமை (08)
மட்டக்களப்பு புளியடிக்குடா சென் செபஸ்தியான் தேவாலயத்தில் நடைபெற்றது.
'இரக்கமுள்ள இருதயத்தில் இறைவன் குடியிருப்பான்' எனும் தொனிப்பொருளில் புளியடிக்குடா பங்கு பணித்தள சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, சுமார் 100 பேர் இரத்ததானம் செய்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் பொறுப்பாளரின் வழிகாட்டலில் தேவாலய பங்குத் தந்தை லோரன்ஸ் லோகநாதன் உள்ளிட்ட பங்குத் தந்தை மக்களிடமிருந்து தாதியர்கள் குருதியின் மாதிரிகளை சேகரித்தனர்.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025