2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இரத்ததான முகாமும் விழிப்புணர்வுக் கருத்தரங்கும்

Niroshini   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

'வரமுன் காப்போம்' எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வும் விழிப்புணர்வு கருத்தரங்கும் நேற்று கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியாலய கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, மட்டக்களப்பு இரத்த வங்கி வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.விவேக் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் வாகரை பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது 56 பேர் இரத்த தானம் வழங்கியுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

புற்றுநோயினால் கடந்த மாதம் மரணமான கதிரவெளியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அமரர் கிருபைராசாவின் நினைவாக இந்நிகழ்வு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X