2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

இராஜபுரத்தில் புதிய குடிநீர்த்தாங்கி

Suganthini Ratnam   / 2017 ஜூலை 16 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பில் இயங்கிவரும் 'அஹிம்சா' எனும் தன்னார்வத் தொண்டர் அமைப்பின் 'தாகம் தீர்ப்போம்' எனும்  தொனிப்பொருளில் குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ்,  ஏறாவூர்ப்பற்றுப் பிதேச செயலகப் பிரிவிலுள்ள இராஜபுரம் கிராமத்தில் குடிநீர்த்தாங்கியொன்று அமைக்கப்பட்டு இன்று மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.  

இந்நீர்த்தாங்கி மூலம் இக்கிராமத்து மக்கள் மட்டுமல்லாது, கித்துள், மரப்பாலம் முதலான கிராம மக்களும் நன்மை பெறுவர்.

இராஜபுரம் மகாவிஷ்னு ஆலயத்துக்குச் சொந்தமான காணியினுள் அமைக்கப்பட்டுள்ள இக்குடி நீர்த்தாங்கி ஆலய நிர்வாகத்தினதும் இராஜபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினதும் பொறுப்பில் இருக்கும். அதேநேரம் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை மேற்பார்வை செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X