2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

இராஜாங்க கல்வி அமைச்சர் பயணித்த வாகனம் விபத்து

Suganthini Ratnam   / 2017 ஜூன் 20 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் பயணம் செய்த உத்தியோகபூர்வ வாகனம் விபத்துக்கு உள்ளானது என, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்புக்கு நேற்று வருகை தந்த அமைச்சர், மையிலம்பாவெளியிலுள்ள கோவிலொன்றுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டுவிட்டு, கொழும்பு -மட்டக்களப்பு நெடுஞ்சாலை வழியாக மீண்டும் மட்டக்களப்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது.

அமைச்சர் பயணம் செய்த வாகனமும், அவருக்குப் பாதுகாப்பு வழங்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயணம் செய்த வாகனமும் ஒன்றுடனொன்று மோதியதில் இரு வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஆயினும், அதிர்ஷ்டவசமாக அமைச்சருக்கோ அல்லது வாகனங்களில் பயணம் செய்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

பாதுகாப்பாக வாகனத்திலிருந்து இறக்கப்பட்ட அமைச்சர், உதவிக்கு விரைந்த மற்றுமொரு வாகனத்தில் மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டார் எனத் தெரிவித்த பொலிஸார், இந்த விபத்துத் தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .