2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இராணுவ அனுசரணையுடன் வடிகான்கள் துப்புரவு

Editorial   / 2020 ஜூன் 03 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி, வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மழை காலங்களில் ஏற்படுகின்ற வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு எதுவாகவுள்ள இயற்கை நீரோட்ட வடிகான்களைத் துப்புரவு செய்து, அவற்றைச் சீரமைக்கும் பணிகளை, மட்டக்களப்பு மாநகர சபையானது, இராணுவத்தின் உதவியுடன் முன்னெடுக்கவுள்ளது.

மட்டக்களப்பு நகர எல்லைக்குட்பட்ட பல கிராமங்களில் இயற்கை நீரோட்டப்பாதைகள் சில பொது நபர்களால் அடாத்தாகப் படிக்கப்பட்டு நிரப்பப்பட்டிருந்தமையாலும், வடிகான்கள் தூர்ந்து போயிருந்தமையாலும் மட்டக்களப்பு நகரானது ஒவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தத்துக்கு உள்ளாகி வருகின்றது.

இவ் அனர்த்தத்தைக் குறைக்கும் வகையில், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன், வடிகான்களை புனரமைக்க நிதியொதுக்கீடு செய்து தருமாறு, கிழக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, தற்கால நிதி நிலைமைகளைக் கருத்தில்கொண்டு, முதற்கட்டமாக இராணுவத்தின் உதவியுடன், பிரதான வடிகான்களை உடனடியாக துப்பரவு செய்து தருவதாக, ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருந்தார்.

இதற்கமைய, ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, இராணுவ உத்தியோகத்தர் கேர்ணல் சரத் குணசேகர, ஆளுநரின் ஊடக செயலாளர் ஆர்.டி.மதுசங்க ஆகியோர் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்வதற்காக மாநகர மேயர் தலைமையில் கள விஜயம் ஒன்றை, நேற்று (02) மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X