2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இராணுவ உயரதிகாரிக்கு விளக்கமறியல்

Janu   / 2024 ஜனவரி 10 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ உயரதிகாரி ஒருவருக்கு மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்குமாறு புதன்கிழமை (10) உத்தரவிட்டுள்ளது.

கொலைச் சம்பவமொன்று தொடர்பாக குறித்த இராணுவ அதிகாரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தனது வரவைப் பதிவு செய்ய வேண்டும் மற்றும் தனது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

​அந்த உத்தரவை குறித்த இராணுவ அதிகாரி அவமதித்ததன் காரணமாக  நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் விளக்கமறியல் உத்தரவை மேல் நீதிமன்ற நீதிபதி திருச்செல்வம் ஜோசப் பிரபாகரன் விதித்துள்ளார்.

மேற்படி, இராணுவ உயர் அதிகாரி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரீ.எல்.ஜவ்பர்கான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X