2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

இரு நேர கழிவகற்றல் திட்டம் அமுல்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூன் 05 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெங்கு நோய்த் தாக்கம் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில், காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும், திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவ வேலைத் திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என். மணிவண்ணன் தெரிவித்தார்.

இதற்கமைய, இந்தத் திட்டம், நாளை(06) முதல் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் விசேட செயலணியின் செயற்றிறனை மீளாய்வுச் செய்யும் கூட்டம், மட்டக்களப்பு மாநகர சபையில் இன்று (05) மாலை நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இதுவரையில் காலையில் மாத்திரம் இடம்பெற்ற திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டம், புளியந்தீவு, கோட்டைமுனை, வெட்டுக்காடு ஆகிய பொதுச் சுகாதாரப் பிரிவுகளை உள்ளடக்கிய சுகாதார வலயங்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X