Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மே 28 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அனைத்தும் மீளத் தொடங்கியுள்ள தற்போதைய சூழ்நிலையில், நாட்டு மக்களை இறைவழிபாடுகளிலும் ஈடுபட அனுமதியுங்கள் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டிலுள்ள வணக்க வழிபாட்டிடங்களைத் திறக்க அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்து அவசரக் கடிதமொன்றை, ஜனாதிபதிக்கு, அவர் இன்று(28) அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அரச, தனியார் துறைகளும் பொதுப்போக்குவரத்தும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இயங்கத் தொடங்கியுள்ளன. உல்லாச விடுதிகள், உணவகங்கள், அழகுக் கலை நிலையங்கள் உட்பட மதுபானக் கடைகள் கூடத் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
“திருமண நிகழ்வுகளும் ஆகக் கூடியது 100 விருந்தினர்களுடன் இடம்பெறுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
“இவை யாவும் வரவேற்கத்தக்க முன்னெடுப்புக்களாக இருந்தாலும், வழிபாடுகளில் ஈடுபட முடியாதவாறு அனைத்து மத வழிபாட்டிடங்களும் அனுமதியளிக்கப்படாமல் தொடர்ச்சியாக மூடப்பட்டே இருப்பது துக்கத்தை ஏற்படுத்துகிறது.
“இதனால் சன்மார்க்கக் கடமைகள், மத நிகழ்வுகள், சமயச் சடங்குகள் என்பனவற்றை அனுஷ்டிக்க முடியாமல் நொந்து போக வேண்டியுள்ளது.
“இறை வழிபாட்டிடங்களில் பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றபொழுது, மக்கள் தாங்கள் நீண்ட காலமாக முடங்கலுக்கு உள்ளாகியிருந்தமையால் ஏற்பட்ட உளத் தாக்கத்துக்கும் குணப்படுத்தலை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
“ஆகையால், சுகாதார வழிமுறைகளைக் கவனமாகக் கையாளும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளும் நிபந்தனைகளுடன், இறை வழிபாட்டிடங்களை மீளத் திறக்குமாறு, நான் நாட்டுத் தலைவராகிய உங்களிடம் வேண்டுகோளை முன்வைக்கின்றேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .