Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
இலங்கையின் கல்வி எழுத்தறிவு மட்டம் 85 சதவீதத்துக்கும் மேலானதாக இருக்கின்றது. இதற்குக் காரணம் இலவசக் கல்வியே ஆகுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள பாத்திமா பாலிகா வித்தியாலயத்துக்கு அச்சுப் பிரதி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மேலும், எமது நாட்டில் மாணவர்களுக்கு தேவையான இலவச சீருடை, இலவச பாடநூல், புலமைப்பரிசில்கள், பாடசாலைகளின் பௌதீக கட்டமைப்புகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
கல்வி உரிமை என்பது அனைவருக்கும் கட்டாயமான ஓர் உரிமையாகும். இந்தக் கல்வியறிவானது சிறந்த முறையில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதனைக் கொண்டு அவர்கள் தமது சமூகத்திற்கும் பிரதேசத்திற்கும் சிறந்ததோர் பங்களிப்பை வழங்கி சமூகத்தை சிறந்ததோர் சமூகமாக மாற்ற வேண்டும். எந்த ஒரு சமூகமும் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமாக இருந்தால் அந்த சமூகம் கல்வியில் முன்னேற வேண்டும். கல்வியால் உயர்ந்து கௌரவம் பெறுகின்ற நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இருக்கின்றது, ஏனென்றால் இலங்கையின் கல்வி மட்டம் எழுத்தறிவு கிட்டத்தட்ட 85 சதவீதத்துக்கும் மேலானதாக இருப்பதேயாகும்' என்றார்.
இந்த நிகழ்வில் காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி.எம்.பதுர்தீன், ஆசிரிய சேவைக்கால உத்தியோகஸ்தர்களான எம்.ஜவாத், எம்.பரீட் உட்பட ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

50 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
6 hours ago
22 Dec 2025