2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

இலவச உம்றா : 3ஆவது குழு சவூதி பயணம்

Niroshini   / 2016 மே 12 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், எப்.முபாரக்

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 500 இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கான இலவச உம்றா வேலைத்திட்டத்தின் மூன்றாவது குழு எதிர்வரும் 19ஆம் திகதி புனித மக்கா நகர் நோக்கி புறப்படவுள்ளது.

இக் குழுவில் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான பயணக் கொடுப்பனவு மற்றும் ஆவணங்கள் நாளை வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் வைத்து ஹிரா பௌண்டேஷன் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

உம்றா அல்லது ஹஜ் கடமைகளை இதுவரைக்காலமும் நிறைவேற்றாத 500 இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கான இலவசமாக உம்றா கடமையை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீ லங்கா ஹிரா பௌண்டேஷன்  அணுசரனை வழங்கியுள்ளது.

இதற்கமைய, நாடாளவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் கொண்ட முதல் குழு கடந்த மாதம்  தங்களது கடமையை நிறைவேற்றி நாடு திரும்பியிருந்தது. இரண்டாவது குழு தற்போது உம்றா கடமைகளை செய்து வருகின்றது. இந்நிலையில், மேலும் 100 பேர் கொண்ட மூன்றாவது குழு எதிர்வரும் 19 ஆம் திகதி புனித மக்கா நகர் நோக்கி புறப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X