2025 மே 22, வியாழக்கிழமை

இலவச சிங்கள மொழி வகுப்புகள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையால் இலவசமாக சிங்கள மொழிக் கல்வி வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபைச் செயலாளர்  எச்.எம். அன்வர் தெரிவித்தார்.

இன ஐக்கியத்துக்கும், அறிவாற்றல் விருத்திக்கும், மொழியறிவு முக்கியம் என்பதால், இந்த சக மொழி வகுப்புகளை இலவசமாக நடாத்துவதற்கு திட்டம் வகுக்கப்பட்டதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேசத்தில், இந்த இலவச சிங்கள மொழி வகுப்புகள் செப்டெம்பர் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் 8 மாத கால பயிற்சி நிறைவில் அரச அங்கிகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு, வியாழக்கிழமை கிரானிலுள்ள “றெஜி” கலாசார மண்டபத்தில் இடம்பெறும்.

இதில், பயனாளிகளான மொழிக் கல்வி பயிலுவோரும், மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபை உறுப்பினர்களும், வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், கிரான் பிரதேச செயலாளர் உட்பட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

நிகழ்வில், சமூக சகவாழ்வுக்காக அர்ப்பணித்துள்ள எழுத்தாளர்களும் கருத்துரை வழங்குகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையால் இதுவரை ஏற்கெனவே இரு முறை நடாத்தப்பட்ட சிங்கள மற்றும் ஆங்கில மொழிக் கல்வி வகுப்புகளில் 135 பேர் பங்குபற்றி பயனடைந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .