2025 மே 08, வியாழக்கிழமை

இலவச பொருட்களை விற்றால் சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

பொதுமக்களின் நலன் கருதி அரசாங்கத்தினால் மானியமாக அல்லது இலவசமாக வழங்கப்படுகின்ற பொருட்களை விற்பனை செய்யும் பயனாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென  ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர்; எஸ்.எல்.எம்.ஹனிபா தெரிவித்தார்;.

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் தெரிவுசெய்யப்பட்ட 62 பயனாளிகளுக்கு சீமெந்து பக்கெட்டுகள் வழங்கும் நடவடிக்கை புதன்கிழமை (02) மாலை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.  

இதன்போது, 62 பயனாளிகளுக்கு தலா பயனாளிக்கு  10 சீமெந்து பக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

மேலும், மானியமாகவோ அல்லது இலவசமாகவோ வழங்கப்படும் பொருட்கள் விற்பனை செய்கின்றமை  கண்டறியப்படின், அதன் பின்னர்; அப்பயனாளிக்கு எந்தவொரு உதவியும் வழங்கப்பட மாட்டாதெனவும் அவர் கூறினார்.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் 25,000 வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,000 வீடுகள் புனரமைக்கப்படவுள்ளன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X