2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இலவச மருத்துவ முகாம்

Editorial   / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன் 

லயன் மாவட்டம் 306 சி 2 ஹோமாகம லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு நூற்றாண்டு நட்சத்திரங்கள் லயன்ஸ் கழகம் ஏற்பாடு செய்திருந்த இலவச மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சேவைத்திட்டங்கள் முகாம், இன்று (28) மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர்  வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது, ஒரு மில்லியன் ரூபாய் செலவில் வெளிநோயாளர் பிரிவு, கண்சிகிச்சையும் மூக்குக் கண்ணாடியும், பற்சிகிச்சை, மாணவர்களுக்கான சேமிப்புப் புத்தகங்கள வழங்கல், கற்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொதிகள் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன.

நிகழ்வில் மாவட்ட ஆளுநர் அசேல கருணாவர்த்தன, ஹோமாகம லயன்ஸ் கழகத் தலைவர் ஆர்.ரி. சிறிசோம, மட்டக்களப்பு நூற்றாண்டு நட்சத்திரங்கள் லயன்ஸ் கழகத் தலைவர் ஆர். பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அங்கத்தினர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .