2025 மே 07, புதன்கிழமை

இலவச வைத்திய முகாம்

Niroshini   / 2015 நவம்பர் 19 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீரிழிவு அறிவூட்டல் நிலையம் ஏற்பாடு செய்த நீரிழிவு நோய்க்கான இலவச பரிசோதனைகள் வவுணதீவு பிரதேச செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

நெஸ்லே சுகாதார விஞ்ஞான நிலையத்தின் அனுசரணையில் நடைபெற்ற இவ் இலவச வைத்திய முகாமில் குருதியில் உள்ள கொழுப்பு மட்டப் பரிசோதனை, குருதியமுக்கம் பரிசோதனை, வைத்திய மற்றும் போசணை தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

குறித்த இலவச வைத்திய முகாமில் 175 பேர் கலந்து கொண்டு பயனடைந்ததோடு தேவையானவர்களுக்கு வைத்தியசாலையில் கிளினிக் செல்வதற்கான ஒழுங்குகளும் செய்து கொடுக்கப்பட்டன.

இதில்,நீரிழிவு மற்றும் அகஞ்சுரப்பு நோய் நிபுணர் வைத்தியக் கலாநிதி தர்ஷினி கருப்பையாப்பிள்ளை, போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள், மருத்துவ மாணவர்கள் மற்றும் தாதியர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X