Suganthini Ratnam / 2016 நவம்பர் 10 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேச இளைஞர்களை ஒன்றிணைத்து நடத்தும் பிரதேச இளைஞர் முகாம் நாளை வெள்ளிக்கிழமை மாலை மட். வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் ஆரம்பமாகவுள்ளதாக அப்பிரதேச இளைஞர் சேவை அதிகாரி சி.அருளானந்தம் தெரிவித்தார்.
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சினால் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் 2016 'ஹோப்' வேலைத்திட்டத்துக்கு அமைய இந்த இளைஞர் முகாம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைவரை (13) நடைபெறவுள்ள இந்த முகாமில் 100 இளைஞர், யுவதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். மேற்படி 100 இளைஞர், யுவதிகளிலும் திறமையான ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு அவருக்கு என்.வி.கியூ. தரச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்போது இளைஞர்களுக்கு இடையில் நட்பைப் பேணுதல், வினைத்திறனுடன் கூடித் தீர்மானம் எடுத்தல், தீர்மானம் எடுக்கும் செயன்முறை, முரண்பாடுகளை இனங்காணல், மாற்று ரீதியிலான தீர்வுகளை இனங்;காணல், பொருத்தமான மாற்று வழிமுறைகளை இனங்;காணல், ஆளுமை விருத்தியும் ஒன்றிணைதலும் உள்ளிட்டவை தொடர்ந்து விளக்கமளிக்கப்படவுள்ளன.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago