2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

இளநீர் லொறிக்கு குழந்தை பலி

Editorial   / 2024 ஏப்ரல் 07 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டரை வயது குழந்தை வீதியை கடக்கமுயன்ற போது, ​இளநீர் ஏற்றிக்கொண்டுவந்த லொறியொன்று மோதியதில் அக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை இகினியாகல நாமல் ஓயா ஏரியின் ஆரம்ப பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த  குழந்தை இகினியாகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பில் இளநீர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X