Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
பேரின்பராஜா சபேஷ் / 2018 ஜூன் 07 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம்களின் பெருநாளையிட்டு, ஏறாவூர் பொது மைதானத்தில், இஸ்லாமிய மார்க்கத்துக்கு முரணான களியாட்ட நிகழ்வுகள் அனைத்துக்கும் முழுமையாகத் தடைவிதிக்க, ஏறாவூர் நகர சபையின் விசேட கூட்டத்தில், இன்று (07) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன், ஆற்றங்கரையோர சிறுவர் பூங்காக்களுக்கும் பொது மைதானத்தில் அமைக்கப்படும் கடைத்தொகுதிகளுக்கும் வருகைதருவதற்கு, பெருநாள் தினத்தன்றும் அதன் மறுநாளும் ஆண்களை மாத்திரம் அனுமதிப்பதென்றும், மூன்றாம் நான்காம் நாட்களில் பெண்களை மாத்திரம் அனுமதிப்பதென்றும், முடிவு செய்யப்பட்டுள்ளது.
நகர சபையின் தவிசாளர் ஐ.அப்துல் வாசித் தலைமையில், நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
மேலும், பெருநாள் நிகழ்வுகளையொட்டி, ஆற்றங்கரையோர வீதிகளில் வாகனப் போக்குவரத்து முற்றாகத் தடைசெய்யப்பட்டிருக்கும்.
பொதுமக்களது பாதுகாப்புக்குத் தேவையான ஆண், பெண் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அத்துடன், தொழுகை நேரங்களில் ஒலிபெருக்கி நிறுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தகாலங்களில் ஜம்இய்யத்து உலமா சபை, பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகியன இவ்வாறான கட்டுப்பாடுகளை விதித்தபோதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படாததால், உள்ளூராட்சி மன்றம் பல்வேறு விமர்சனங்களை எதிர்நோக்கியதைக் கருத்திற்கொண்டு, இம்முறை கட்டுப்பாடுகளை கடுமையாக விதிக்க, சபை முடிவுசெய்துள்ளது.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago