2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஈழப் புரட்சி அமைப்பினால் ஈரோஸ் ஜனநாயக முன்னணி அறிவிப்பு

Gavitha   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் புரட்சியினை ஏற்படுத்திய ஈழப் புரட்சி அமைப்பினால் ஈரோஸ் ஜனநாயக முன்னணி அறிவிப்பு நிகழ்வு நாளை சனிக்கிழமை (27) மட்டக்களப்பில் நடைபெறுகிறது.

முன்னாள் ஈரோஸ் அமைப்பின் ஆர்.ராஜேந்திரா தலைமையில் நடைபெறும் இந்த ஈரோஸ் ஜனநாயக முன்னணி எனும் அரசியல் கட்சி அறிவிப்பு நிகழ்வில், ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தோழர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து சுயேட்சைக்குழுவாக பொதுத் தேர்தலில் பங்கேற்று 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்த ஈழப்புரட்சி அமைப்பு,  வடக்கு கிழக்கு மலையக மக்களின் தற்கால தேவைகளை உணர்ந்து ஈரோஸ் ஜனநாயக முன்னணி எனும் அரசியல் கட்சியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நாளை 27ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், வடக்கு - கிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், மற்றும் மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .