2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

உணவில் இறந்த பல்லி; உணவக உரிமையாளருக்கு அபராதத்துடன் சிறைத்தண்டனை

Suganthini Ratnam   / 2016 ஜூன் 29 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

இறந்த நிலையில் பல்லியுடன் கூடிய உணவுப்பொதியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் உணவக உரிமையாளர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன், 06 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா, செவ்வாய்க்கிழமை (28) மாலை தீர்ப்பளித்தார்.

மட்டக்களப்பு, ஆரையம்பதிப் பிரதேசத்தில் உள்ள  உணவகம் ஒன்றில் மதியவேளை உணவுப் பொதியை  வாங்கிய பெண் ஒருவர், அதை வீட்டுக்கு கொண்டுசென்று உட்கொள்வதற்காக தயாராகியுள்ளார். இதன்போது, உணவுப் பொதியை பிரித்துப் பார்த்தபோது, கறிக்குள் இறந்த நிலையில் பல்லி இருந்ததை அவதானித்துள்ளார்.

இது தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு குறித்த பெண் தகவல் வழங்கினார். இதனை அடுத்து,   குறித்த உணவகத்துக்கு பொலிஸாருடன் சென்ற  பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் விசாரணை மேற்கொண்டு குறித்த உணவகத்துக்கு சீல் வைத்ததுடன், உணவக உரிமையாளரையும் கைதுசெய்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X