2025 மே 06, செவ்வாய்க்கிழமை

’உணவின்றி ஒருவர் இறந்தாலும் அதற்கான பொறுப்பை மாவட்டச் செயலாளரே ஏற்க வேண்டும்’

Editorial   / 2020 ஏப்ரல் 08 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது உணவு பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் எனவே உணவு இன்றி ஒருவர் உயிரிழக்க நேரிட்டாலும் அதற்கான பொறுப்பை, மாவட்டச் செயலாளரே ஏற்க வேண்டும் என்றும், இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைவர் நாகராசா விஷ்னுகாந்தன் தெரிவித்தார். 

இது தொடர்பில், ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 

மட்டக்களப்பு மாவட்டத்தில், தற்போது உணவு தட்டுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் 10 அல்லது 15 நாள்களுக்கு முன்னர் தொடர் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தால், மக்கள் முன்கூட்டியே ஏதாவது செய்திருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

அரசியல் வாதிகள், தனிப்பட்ட நபர்கள் தங்களுடைய விசுவாசிகளுக்கு மட்டும் பொருள்களை  விநியோகிப்பதாகவும் அவற்றை நிறுத்தி பிரதேச செயலாளர்களிடம் பொருள்;களைக் கொடுத்து, கிராம சேவகர்களை அனுப்பி உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X