2025 மே 02, வெள்ளிக்கிழமை

உணவு உற்பத்தியை விரிவுபடுத்த புதிய திட்டம்

Editorial   / 2020 ஜூன் 03 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி , ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

உள்நாட்டு விவசாயத்தின் உற்பத்தியை அதிகரிக்கவும் எதிர்காலத்தில் இலவச மானியங்கள் - உள்ளீடுகள், விவசாய ஏற்றுமதிக் கிராமங்களை உருவாக்குவிக்கவும் ஏனைய உற்பத்தி உதவிகளை வழங்குவதற்கும் புதியதிட்டம் அமுலாகின்றது.

இதன்படி, விவசாயத் திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், விவசாய விரிவாக்கல் திணைக்களம் ஆகியனவற்றால் தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.

மாவட்ட மட்டத்தில் வெளிக்கள உத்தியோகத்தர்களால் இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் புதிய தரவு திரட்டல் மூலமே, ஜனாதிபதியின் வழிகாட்டல் ஊடாக, மாவட்ட, மாகாண, தேசியரீதியில் உணவு உற்பத்தித் திட்டங்கள் வகுக்கப்படவுள்ளன என, மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் வை.வீ.இக்பால் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .