2025 மே 02, வெள்ளிக்கிழமை

உணவு நஞ்சானதால் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2020 ஜூன் 03 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு - ஆரையம்பதி, கோயில்குளம் பகுதியில், திருமண வீடொன்றில் உணவு நஞ்சானதால் 30 பேர் வரை சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, ஆரையம்பதி சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எம்.ரமேஸ் தெரிவித்தார்.

கோயில்குளம் பகுதியில் திருமண வீடொன்றில் நேற்றிரவு (02) சுமார் 200 பேர் வரை கோழி இறைச்சி கலந்த புரியாணியை உணவாக உட்கொண்டுள்ளனர்.

இதன் பின்னர் இவர்களில் அதிகமானோர் மயக்கம், வாந்தி, காய்ச்சல் காரணமாக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுள் பெண்களும் சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுகாராதாரப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலையும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தொடர்ந்தும் வந்து கொண்டிருப்பாகவும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .