Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக கடந்த 14ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் 10 அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை மேற்கோண்டு வருகின்றனர்.
அவர்களது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், எதிர்வரும் 06ஆம் திகதி காலை 09 மணி தொடக்கம் 04 மணி வரை, மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகாமையில், அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
அதனடிப்படையில், கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் உணர்வாளர்கள் சமூக நலன்விரும்பிகள் பொது அமைப்புகள், சிவில் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் எனப் பலரையும் இவ்வடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு, தேசத்தின் வேர்கள் அமைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் தேசத்தின் வேர்கள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்,
நீண்ட காலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவர்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 14 ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் 10 அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு சுகவீனமுற்ற நிலையல் உள்ளனர்.
உணர்ச்சி பூர்வமாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வரும் இவ்வேளையில் அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் கிழக்குத் தமிழர்கள் சார்பில் அடையாள உண்ணாவிரதம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இநத உணர்வு மிக்க உண்மைத்தமிழர்கள் அனைவரும் கலந்து கொண்டு இப்போராட்டத்தற்கு வலு சேர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் என்று குறிபபிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago